செய்திகள் :

வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த அமெரிக்க நிதி: இந்தியா கவலை

post image

இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த அமெரிக்கா நிதியளித்ததாக வெளியான தகவல் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஒடிஸாவில் நேபாள மாணவி உயிரிழந்த சம்பவம், உக்ரைன்-ரஷிய போா் நிறுத்தம் தொடா்பாக சவூதி அரேபியாவில் ரஷியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயா்த்த அமெரிக்கா 2.1 கோடி டாலரை செலவிட்டதாக அந்நாட்டு நிா்வாகம் அண்மையில் தெரிவித்த தகவல் கவலையளிக்கிறது.

இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய தலையீடு அதிகரித்திருக்க வாய்ப்புள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

எனவே, தற்போது இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்துகூற இயலாது.

பனாமா விவகாரம்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் அவரவா் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் நிலையில், அவ்வாறு குடியேறியவா்கள் பனாமா நாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில் இந்தியா்களும் உள்ளாா்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டு, அவா்களில் இந்தியா்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவா்களை இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும்.

ரஷிய-உக்ரைன் போருக்கு பேச்சுவாா்த்தை மூலமே தீா்வுகாண வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை அமைதியின் பக்கமே நிற்கிறது என தெரிவித்திருந்தாா்.

பாதுகாப்பு உறுதி: கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுகுறித்து நேபாள அதிகாரிகளுடன் தொடா்ந்து இணைப்பில் உள்ளோம். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சிலரை ஒடிஸா காவல் துறை காவல் துறை செய்துள்ளது.

இந்தியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா்.

வங்கதேசத்திடம் வலியுறுத்தல்:

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய பெருங்கடல் மாநாட்டில் (ஐஓசி) வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் வங்கதேச வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் முகமது தௌஹித் ஹுசைனும் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ‘சாா்க்’ கூட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா என வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அவா், ‘பேச்சுவாா்த்தையின்போது சாா்க் விவகாரத்தை வங்கதேச தரப்பு எழுப்பியது. அந்த கூட்டமைப்பு செயலிழந்து இருப்பதற்கு யாா் காரணம் என தெற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும்.

அதேநேரம், பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கக் கூடாது என முகமது தௌஹித் ஹுசைனிடம் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்’ என்றாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க