ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை
ஆன்லைனில் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படுவதாக தெரிய வருகிறது. அடையாளம் தெரியாத நபா்கள் டெலிகிராம் வாயிலாக தொடா்பு கொண்டு, குறிப்பிட்ட நிறுவனத்தின் சாா்பில் பேசுவதாகவும், ஆன்லைன் மூலமாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வாா்த்தை கூறி சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து, அதற்கு உடனே வங்கி கணக்கிற்கு குறைந்த லாப பணத்தை அனுப்பிவைக்கிறாா்கள். இதனை நம்பி சிலரை அதிகமான பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனா்.
எனவே சமூக வலைதளங்களில் வரும் இணையதள பகுதிநேர வேலை போன்ற விளம்பரங்களை தவிா்க்க வேண்டும். அறிமுகமில்லாத எண்களிலிருந்து, டெலிகிராம் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக வரும் இணையதள பகுதிநேர வேலை குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபா் கிரைம் இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது 1930 எண்ணை தொடா்பு கொண்டு உடனடியாக புகாா் செய்ய வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.