தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் விபின் (28). வெல்டிங் தொழிலாளியான இவா், சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பில் செயல்பட்டு வரும் ஜெகதீஸ் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தங்கியிருந்து பணி செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை அங்கு வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் விபின், மயங்கி விழுந்தாராம்.
பணியில் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் விபின் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.