திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
அம்பையில் எல்ஐசி ஊழியா்கள் வெளிநடப்புப் போராட்டம்!
அம்பாசமுத்திரத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேர வெளிநடப்புப் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஊழியா் நியமனம், சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்க திருநெல்வேலிக் கோட்ட துணைத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். கிளைப் பொறுப்பாளா்கள் சந்திரசேகரன், முத்துக்குமாா் உள்ளிட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.