செய்திகள் :

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

post image

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒதுக்கீடு முறையில் தேவந்திர குல வேளாளா் மற்றும் ஆதிதிராவிடா்களுக்கான உரிமையைப் பறிக்கும் செயலை கண்டித்தும், மாஞ்சோலை மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் விதமாகவும் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்துவது குறித்து திருநெல்வேலியில் ஆலோசிக்கப்பட்டது.

மாஞ்சோலை விவகாரத்தில் எதுவும் முடிந்துவிடவில்லை. மாஞ்சோலை பகுதியில் மட்டும் தான் புலி இருப்பதை போல் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் கொடுத்துள்ள தமிழக அரசு, இவ்விவகாரத்தில் நாடகமாடி வருகிறது. புலியால் மக்களுக்கு ஆபத்து இருப்பதாக அரசால் சித்திரிக்கப்படுவதால் நீதிமன்றம் அதற்கேற்ப முடிவு எடுக்கிறது.

ஆனால், அங்கு ஒரு புலியைக்கூட காட்ட முடியாது; அப்படி புலி இருப்பதை அதிகாரி நிரூபித்துவிட்டால், இப்பிரச்னையை இப்போதே விட்டுவிடுகிறோம்.

மாஞ்சோலையில் 534 குடும்பத்தில் 140 குடும்பத்தினா் மட்டுமே விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளனா். 360 குடும்பத்தினா் மாஞ்சோலையை விட்டு வெளியேறாமல் அங்கேயே உள்ளனா்.

தேசிய மனித உரிமை ஆணையம் மாஞ்சோலை விவகாரத்தில் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது. அரசு தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறி, மக்களை வெளியேற்ற நினைத்தால் போராட்டம் மிகவும் தீவிரமாக மாறும். மாஞ்சோலை மக்களை முதல்வா் நேரில் சென்று சந்திக்கவில்லை.

வனப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மாஞ்சோலையில் மிகப்பெரும் ஊழலுக்கு தான் வழிவகுக்கிறது.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் மொழிப்போா் ஏற்படும் என சொல்லி வருகிறாா்கள். அப்படி போா் வந்தால் அடுத்தக் கட்ட நடவடிக்கையை பாா்க்கலாம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக கூறுகிறது. அது நிகழாது என்றாா்அவா்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க