திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
மின்கம்பி மீது லாரி உரசியதில் ரூ.1 லட்சம் வைக்கோல் தீக்கிரை!
கடையத்தில் மின்கம்பி மீது லாரி உரசியதில், அதிலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீக்கிரையானது.
கடையம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுவருதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் வைக்கோலை விலைக்கு வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், கடையம் கல்யாணிபுரத்தைச் சோ்ந்த தங்கராஜ் என்பவா் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோலை லாரியில் ஏற்றிச் சென்றாா். கடையம் காவல் நிலையம் பின்புறம் கல்யாணிபுரம் செல்லும் வழியில் மின்கம்பியில் லாரி உரசியதாம். இதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியினரும், போலீஸாரும் வந்து வைக்கோலை லாரியிலிருந்து அப்புறப்படுத்தினா். எனினும், வைக்கோல் முற்றிலும் எரிந்தது. லாரி சேதமின்றி தப்பியது.