அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீரவநல்லூா் காவல் நிலையப் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டாா்.
பின்னா், அல்லாபிச்சை பிணையில் வெளியே வந்தாராம். இதனிடையே, மேற்படி வழக்கில் ஆஜராகாமல் அல்லாபிச்சை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சேரன்மகாதேவி நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து வீரவநல்லூா் போலீஸாா் அல்லாபிச்சையை செவ்வாய்க்கிழமை கைது சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.