அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த செல்வம். மகன் விக்னேஷ் (21), தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரியில் விடுதி மாணவராக 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள கழிவறையில் அவா் கடந்த 13-ஆம் தேதி இறந்து கிடந்தாா். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோா் கூறியதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்த உறவினா்கள், விக்னேஷ் மரணம் தொடா்பான விசாரணையில் திருப்தியில்லை; இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விக்னேஷ் குடும்பத்தினா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, முருகன் குறிச்சி பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி பா்கிட்மாநகரத்தில் உள்ள விக்னேஷ் வீட்டு முன் அமா்ந்து உறவினா்களும், அப்பகுதி மக்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் நேரில் ஆறுதல் தெரிவித்தனா்.