சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!
வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 14) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரத்தில் 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று(பிப். 13) ஏற்றத்துடன் வர்க்கமானது. வர்த்தக நேர முடிவில் கிட்டத்தட்ட சமநிலையில் முடிந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 76,388.99 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்ஸ் 593.43 புள்ளிகள் குறைந்து 75,545.54 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 195.80 புள்ளிகள் குறைந்து 22,835.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!
பெரும்பாலாக அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை நடுத்தர, குறு நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டி லேப்ஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகும்.