போர்போன் விஸ்கி மீதான சுங்க வரி 50% குறைப்பு!
புதுதில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தீவிரமடைந்துள்ளதால், போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தைக்கு சற்று முன்னதாக போர்பன் விஸ்கி மீதான சுங்க வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பிற மதுபானங்களை இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி குறைக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து 100 சதவிகித வரி விதிக்கப்படும்.
இந்தியாவுக்கு போர்பன் விஸ்கியை ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், இது இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களிலும் நான்கில் ஒரு பங்காகும்.
வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, போர்பன் விஸ்கி இனி அதன் இறக்குமதிக்கு 50 சதவிகித சுங்க வரியை ஈர்க்கும். இது முன்பு 150 சதவிகிதமாக இருந்தது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியா 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்பன் விஸ்கியை இறக்குமதி செய்தது. அதே வேளையில் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக அமெரிக்கா 7.5 லட்சம் அமெரிக்க டாலர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 லட்சம் அமெரிக்க டாலர், சிங்கப்பூர் 2.8 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் இத்தாலி 2.3 லட்சம் அமெரிக்க டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க: விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!