முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!
புதுதில்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்றது.
நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய மின்சார கார்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் விற்பனைக்காக அதிகாரப்பூர்வ புக்கிங் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளே சுமார் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்தது மஹிந்திரா.
எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 கார்கள் விற்பனைக்காக அதிகாரப்பூர்வ புக்கிங்கில் புதிய சாதனையை படைத்துள்ள நிலையில், பிஇ 6 காருக்கு 44 சதவிகித முன்பதிவும், எக்ஸ்இவி 9இ காருக்கு 56 சதவிகித முன்பதிவும் கிடைக்க பெற்றது. இதன் விலையானது ரூ.18.9 லட்சம் முதல் ரூபாய் 30.5 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) என தெரியவந்துள்ளது.
இதில் 79 கிலோவாட் பேட்டரியைக் கொண்ட டாப்-எண்ட் பேக் த்ரீ, கார்களுக்கான மொத்த முன்பதிவு 73 சதவிகிதமாக இருந்தது.
இந்தியாவில் கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் பயணிகள் வாகன விற்பனை சுமார் 1 லட்சம் யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு