செய்திகள் :

மிட், ஸ்மால்கேப் பேரணியுடன் நிலையற்ற அமர்வில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

post image

மும்பை: இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் வாகனம், குறைக்கடத்தி மற்றும் மருந்து இறக்குமதிகள் மீது 25 சதவிகித வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவித்த நிலையில் முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையாக இருந்தனர். இருப்பினும் இன்றிரவு வெளியிடப்படவுள்ள ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் அறிக்கை குறித்து அச்சத்தில் முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 386.01 புள்ளிகள் சரிந்து 75,581.38 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130.45 புள்ளிகள் சரிந்து 22,814.85 புள்ளிகளாக இருந்த நிலையில், மீண்டும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.16 புள்ளிகள் உயர்ந்து 76,120.85 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 38.60 புள்ளிகள் உயர்ந்து 22,983.90-ஆகவும் வர்த்தகமானது.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 28.21 புள்ளிகள் குறைந்து 75,939.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 12.40 புள்ளிகள் குறைந்து 22,932.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

நிஃப்டியில் டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், டிசிஎஸ், ஹெச்யுஎல், இன்ஃபோசிஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய பங்குகள் சரிந்தும், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிண்டால்கோ, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், எய்ச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சோமேட்டோ, டாடா ஸ்டீல், என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மகேந்திரா வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் சன் பார்மா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், நெஸ்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிந்து முடிந்தது.

இன்று பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.3 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.4 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.

துறை வாரியாக ஐடி குறியீடு 1.3 சதவிகிதமும், பார்மா குறியீடு 0.7 சதவிகிதமும், ஊடகம், எரிசக்தி, உலோகம், பொதுத்துறை வங்கி, ரியாலிட்டி, மூலதன பொருட்கள் 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்ந்தது.

நாட்கோ பார்மா, ஜைடஸ் லைஃப், டிம்கென் இந்தியா, கிரைண்ட்வெல் நார்டோ, கார்போரண்டம் யுனிவர்சல், ஈதர் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் ஹெல்த், கிர்லோஸ்கர் ஆயில், கேன் ஃபின் ஹோம்ஸ், பிவிஆர் ஐநாக்ஸ், மஹிந்திரா லைஃப், சன் பார்மா அட்வான்ஸ்டு, ரத்னாமணி மெட்டல், கஜாரியா செராமிக், கோத்ரேஜ் கன்ஸ்யூமர், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன், சென்ட்ரல் பேங்க், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், சொனாட்டா சாப்ட்வேர் உள்ளிட்ட 380 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார சரிவை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் ஷாங்காய் உயர்ந்தும், அதே நேரத்தில் டோக்கியோ மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்குகளை வாங்குபவர்களாக மாறி ரூ.4,786.56 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.05 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 75.88 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: குறைந்த விலையில் ஜியோ எலக்ட்ரிக் சைக்கிள்!

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. ரெப்போ வட்டி விகித்தைக் குறைப்பதாக ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவன... மேலும் பார்க்க

9% சரிந்த பிண்ணாக்கு ஏற்றுமதி

இந்தியாவின் பிண்ணாக்கு ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 9 சதவீதம் சரிந்துள்ளது. மதிப்பீட்டு காலகட்டத்தில் ராப்சீட் பிணணாக்கு, ஆமணக்கு விதை பிண்ணாக்கு ஆகியவற்றின் ஏற்றுமதி கணிசமாகக் குற... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் முடிந்த பங்குச்சந்தை!

மும்பை : பங்குச்சந்தை வியாழக்கிழமை(பிப். 20) சரிவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து மூன்றாவது ... மேலும் பார்க்க

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு - ஐபோன் 16இ அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவாக ஐபோன் 16இ மாடல் அறிமுகமாகியுள்ளது.‘ஆப்பிள் குடும்பத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவர் வருகை தருகிறார்’ என்று குறிப்பிட்டு, ஐபோன் 16இ மாடல் மீதான எதிர்பார்ப்பை, அந்நிறுவனத... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! ஐடிசி பங்குகள் 2% வீழ்ச்சி!

பங்குச்சந்தை இன்று (பிப். 20) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,672.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், காலை 11.45 மணியளவில், சென்செக... மேலும் பார்க்க