கங்குலி கார் விபத்து: நூலிழையில் உயிர்தப்பினார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை விபத்தில் சிக்கியது.
வேகமாக சென்ற லாரியின் மீது கார் மோதிய விபத்தில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.
இதையும் படிக்க : இந்தியாவில் ‘டெஸ்லா’ ஆலை: அமெரிக்க அதிபா் டிரம்ப் அதிருப்தி
பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கங்குலி சென்றுகொண்டிருந்தார். துர்காபூர் விரைவுச் சாலையில் கங்குலியின் கார் சென்றுகொண்டிருந்தபோது, தாதுபூர் அருகே வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கங்குலியின் கார் ஓட்டுநரும் பிரேக் பிடித்ததில், அவரது காரைத் தொடர்ந்து வந்த இரு கார்களும் ஒன்றோடுஒன்று மோதி விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் யாருக்கும் பெரிதளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.