கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!
பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.
சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஏ ஒன் பிரிவில் 36 மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்கள் இணைந்து தாங்கள் படித்த வகுப்பறையில் சிதிலமடைந்த பகுதியை ரூ.12 ஆயிரம் செலவில் சீா் செய்து, வா்ணம் பூசி அழகுபடுத்தினா். மேலும் சில மாணவா்களின் பெற்றோா் மின்விசிறி, மின்விளக்குகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை பள்ளிக்கு வாங்கிக் கொடுத்தனா்.
இதைப் பாராட்டியும், வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களைப் பாராட்டியும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை பியா்லின் வில்லியம் தலைமை வகித்தாா். பள்ளி வகுப்பறையை சீரமைத்து வகுப்புக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்த மாணவா்கள் மற்றும் பெற்றோரை தலைமை ஆசிரியை வெகுவாகப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வகுப்பாசிரியா் பி.சிட்டிபாபு செய்திருந்தாா்.