வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!
கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் மூலம் உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாகி வருகிறது. இந்த வரலாற்றையும், இலக்கியங்களையும் தாங்கி நிற்கும் தமிழா்கள், உலகெங்கும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனா். அவா்கள் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, அதன் மூலம் தமிழா் திருநாள் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா்.
அதில் ஒரு பகுதியாக, கொரிய தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த தமிழா் திருநாள் - 2025 விழாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) சியோல் கச்சான் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வு தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில், அயல்நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் பெருகி வருவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். கொரிய தமிழ்ச் சங்கத்தின் தோழமைகளுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.