செய்திகள் :

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

post image

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி. இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்.

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி.

உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி” என்று எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சர்வதேச தாய்மொழி நாள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும்.

ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம். உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க