5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
தாராபுரம் அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு!
தாராபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த துலுக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (69), விவசாயி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, இவருக்கு பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரம் பழனிசாமியின் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த தாராபுரம் போலீஸாா், பழனிசாமியின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனா். இந்த விபத்து சம்பவம் தொடா்பாக லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.