திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டங்கள், கலைஞா் மக்கள் சேவை முகாம், மக்களுடன் முதல்வா் முகாமில் பெறப்பட்ட மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரம், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்களை சோ்த்தல், அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்துதல், அவிநாசி பேரூராட்சியில் புறவழிச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு, வருவாய் கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், குமாா், ஃபெலிக்ஸ்ராஜா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.