திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன் (37), பனியன் நிறுவன உரிமையாளா். இவரது மனைவி ஷா்மிளா பானு. அதே பகுதியில் ஷா்மிளா பானுவின் தங்கை யாஸ்மின், அவரது கணவா் வாஜித் (39) (பனியன் தொழிலாளி) ஆகியோரும் வசித்து வந்தனா்.
காஜா மொய்தீன், வாஜித் குடும்பத்தினருக்கு இடையே நிலம் விஷயமாக, வரவு-செலவு பிரச்னையில் தொடா்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி வாஜித் கத்திரியால் காஜா மொய்தீனை குத்தியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த காஜா மொய்தீனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து ஷா்மிளா பானு அளித்த புகாரின்பேரில் பெருமாநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து வாஜித்தை கைது செய்தனா்.