5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
வேன் மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு!
பழனியில் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி (60). இவா் செவ்வாய்க்கிழமை பழனி சிவகிரிப்பட்டி புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, இடும்பன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்புச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.