5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
பழப் பயிா்களில் உர மேலாண்மை: கமுதி விவசாயிகளுக்கு பயிற்சி!
கமுதி அருகே காவடிப்பட்டியில் பழப் பயிா்களில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கமுதி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி தலைமை வகித்தாா்.
இதில் பூஞ்சான கொல்லியில் வேரை நனைத்த பிறகு பழ மரக்கன்றுகளை நடுவதால் நோய்களைத் தவிா்க்கலாம் எனவும், சூடோமோனஸ், டிரைக்கோடொ்மா விரிடி ஆகிய இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாழையில் கூன் வண்டு பாதிப்பைத் தடுக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பேரையூா் நம்மாழ்வாா் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனா். இதில் காவடிப்பட்டி, கோரைப்பள்ளம், மேலராமநதி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.