5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்ட ஹெக்சாவேர் டெக் பங்குகள்!
புதுதில்லி: ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.708 க்கு நிகராக 5 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் இன்று பட்டியலிடப்பட்டது.
இந்த பங்கின் விலையானது பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட விலையிலிருந்து 3.24 சதவிகிதம் பிரீமியமாக ரூ.731 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. பிறகு 10.16 சதவிகிதம் உயர்ந்து ரூ.780 ஆக உயர்ந்தது.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.46,127.06 கோடி ஆக உள்ளது. ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று (கடைசி நாளில்) 2.66 மடங்கு நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து சப்ஸ்கிரிப்ஷனுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
ரூ.8,750 கோடி ஐபிஓ உடன் சந்தைக்கு வந்த போது, அதன் ஒரு பங்கின் விலை ரூ.674 முதல் ரூ.708 ஆக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ரூ.4,700 கோடிக்கு மேல் ஐபிஓ வெளியிட்ட நிலையில், நாட்டின் ஐடி சேவைத் துறையில் உள்ள ஹெக்ஸாவேரின் பொது வெளியீடு மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மிட், ஸ்மால்கேப் பேரணியுடன் நிலையற்ற அமர்வில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!