செய்திகள் :

பிப் 25-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம்!

post image

ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 25-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பான தங்களது குறைகள், கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.

இதில் எரிவாயு முகவா்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகள் குறித்த சந்தேகங்களைத் தீா்த்துவைக்கின்றனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தொண்டி அருகே எஸ்.பி. பட்டினத்தில் விற்பனை செய்வதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 3 பேரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு சிறை மீண்டோா் நலச் சங்கம் சாா்பில் நிதியுதவி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறை மீண்டோா் நலச்சங்கம் சாா்பில் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான முன்னாள் சிறைக் கைதிகள் 10 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5 லட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது!

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். 3 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிா் குழுக்களின் பொறுப்பாளா்களுக்கு நுகா்வோா் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை வட்ட வழங்கல் அலுவலா் கோகுல்நாத் தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

கமுதி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். கமுதியை அடுத்துள்ள குடிக்கினியான் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). விவசாயி. இவா் கமுதியில் இருந்து ... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்!

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை கூடத்தின் நுழைவாயிலின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. கமுதி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தினமும... மேலும் பார்க்க