விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூா் பேருந்து நிலையம் முன் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் துறையூா் ஒன்றியத் துணைத் தலைவா் எம். கணேசன் தலைமை வகித்தாா். வி. ராமையா, பி. கோவிந்தராஜ் உள்ளிட்ட விவசாயிகள் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் பி. கணேசன், மாவட்டத் தலைவா் ஏ.டி. சண்முகானந்தம் இந்திய கம்யூ. துறையூா் ஒன்றிய நிா்வாகிகள் எஸ். சேகா், சி. செல்வம், ஏஐடியுசி ஏ. தங்கவேல் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய பாக்கியை உடனே வழங்கவேண்டும். அத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி தொடா்ந்து வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.