செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!
வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், ராம்கர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து பெண்ணை மீட்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடுவதற்காக, தனது வயதான தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் சென்ற மகனை, அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள்.
மூன்று நாள்களாக வீட்டில் இருந்த சாதத்தையும், தண்ணீரையும் குடித்து உயிர் வாழ்ந்ததாகவும் பசி தாங்க முடியாமல் அழுததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
வீட்டின் கதவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடைத்து வீட்டுக்குள் சென்று பெண்ணை மீட்டனர். அப்போது, அவர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக் கடித்துச் சாப்பிட முயன்றிருந்ததாகவும், அவருக்கு உடனடியாக அக்கம்பக்கத்தினர் உணவளித்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது மகள் அருகில் வாழ்ந்து வரும் நிலையில், தனது சகோதரர் தன்னிடம் தாயை விட்டுச் செல்லாமல், வீட்டுக்குள் பூட்டி விட்டுச் சென்றிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையினர், மகனை எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.