ஷாஜாதா பாக் பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து
வடக்கு தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிரானுல் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து மாலை 6.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு மாலை 6.45 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.