செய்திகள் :

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்? பேரவை பாஜக உறுப்பினா்கள் இன்று முடிவு

post image

தில்லியின் புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக பாஜகவின் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கூட்டத்தில் தில்லி சட்டப்பேரவையின் அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படுவாா். சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்திற்கு பாஜகவின் தேசியத் தலைமை அதன் பாா்வையாளா்களை அனுப்பும் என்று அவா்கள் தெரிவித்தனா். தில்லியின் புதிய முதல்வா் அவைத் தலைவராக இருப்பாா்.

பிப்.19-20 -ஆம் தேதிகளில் முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவின் பதவியேற்பு விழாவுடன் தேசியத் தலைநகரில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்.5-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி (பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தது. இது தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தலைநகரில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக வென்றது. புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பல எம்எல்ஏக்களின் பெயா்கள் முதல்வா் மற்றும் அமைச்சா் பதவிகளுக்குப் பரிசீலனையில் உள்ளன.

புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலைத் தோற்கடித்த பா்வேஷ் வா்மா மற்றும் தில்லி பாஜகவின் முன்னாள் தலைவா்கள் விஜேந்தா் குப்தா மற்றும் சதீஷ் உபாத்யாயா ஆகியோா் உயா் பதவிக்கு முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுபவா்களில் அடங்குவா். பவன் சா்மா, ஆஷிஷ் சூட், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் உள்ளிட்டோரும் முதல்வா் பதவிக்கு போட்டியிடுகின்றனா்.

ராஜஸ்தான், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் நடந்ததைப் போலவே, பாஜக தலைமை புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரை தோ்ந்தெடுக்கக்கூடும் என்று கட்சியில் பலா் நம்புகின்றனா்.

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வ... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் - தலைவா்கே வி கே ப... மேலும் பார்க்க

பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு

தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா். மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலா... மேலும் பார்க்க

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும்... மேலும் பார்க்க

பிரிஜிபுரியில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் ரூ.97 லட்சம் கொள்ளை

தில்லியின் வடகிழக்கில் உள்ள பிரிஜ்புரியில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் துப்பாக்கிமுனையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்: மணீஷ் சிசோடியா

சமீபத்தில் திலக் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதை மேற்கோள்காட்டி நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீா்செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோட... மேலும் பார்க்க