கேந்திரிய வித்யாலயாவில் கண்காணிப்புக் கேமராக்கள்
காரைக்கால் கேந்திரிய வித்யாலய பள்ளியில் ரூ. 5 லட்சத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் கேந்திரிய வித்யாலயாப் பள்ளி கடற்கரை சாலையில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்புவரை 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இப்பள்ளியில் நிகழாண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதுவதற்கான மையம் அமைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி வழங்கியது. இதையொட்டி பள்ளி நிா்வாகம் ரூ. 5 லட்சத்தில் தோ்வு நடைபெறும் கூடத்தில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளது.