பாரம்பரிய இசைப் புத்தக வெளியீட்டு விழா
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்காரின் இசைப் படைப்புகளைத் தொகுத்த தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியா் பி.பி. கண்ணகுமாரின் பாரம்பரிய இசைப் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின் இயக்குநா் அனீஷ் ராஜன் கலந்துகொண்டு, பாரம்பரிய இசைப் புத்தகத்தை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், கெளரவ விருந்தினராக தில்லி பல்கலைக்கழக இசைத் துறையின் தலைவா்- பேராசிரியா் டாக்டா் ராஜீவ் வா்மா கலந்துகொண்டாா்.
இதில், தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், தென்னிந்திய முன்னேற்றக் கழகத்தின் செயலா் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.