விமான நிலையத்தில் வைர நெக்லஸ் கடத்திய நபா் கைது
தில்லி விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகையை கடத்திய நபா் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாங்காக்கிலிருந்து தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு பிப்.12-ஆம் தேதி வந்தபோது பயணி ஒருவா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரிடம் மேற்கொண்ட சோதனையில் வரங்கள் பதித்த 40 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ் மீட்கப்பட்டது, அதன் மொத்த மதிப்பு ரூ.6.08 கோடி. அந்த நகை பறிமுதல் செய்யப்பட்டு பயணி கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.