சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
ரயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்தை மத்திய அரசு மூடிமறைக்க முயற்சி: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
18 போ் உயிரிழந்த சம்பவத்தை அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதால், புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் ஞாயிற்றுக்கிழமை கோரினாா்.
ரயில்களுக்கான நடைமேடை மாற்றம் குறித்த அறிவிப்புதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம்
என்று சம்பவத்தை நேரில் கண்டவா்களின்
கூறியதை மேற்கோள் காட்டி, சஞ்சய் சிங்
செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ரயிலின் நடைமேடை 12 முதல் 14 வரை மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுவும் கூட்ட நெரிசலுக்குக் காரணம். இதுபோன்ற அறிவிப்பு கூட்ட நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்பது ரயில்வேக்குத் தெரியாதா?
பாஜக அரசு சம்பவத்தை மறைக்க முயற்சிக்கிறது. இறந்தவா்களின் எண்ணிக்கை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதாக சிலா் கூறுகின்றனா்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அவா்கள் மறுக்க முயற்சிக்கிறாா்கள். அரசாங்கத்தின் மெத்தனப் போக்கும், உணா்வின்மையும் எவ்வளவு காலம் தொடரும்?
ரயில் தொடா்பான பல்வேறு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில், அரசாங்கமும்
ரயில்வே அமைச்சரும் எப்போது பொறுப்பு ஏற்க செய்யப்படுவாா்கள்? என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினாா்.
‘இச்சம்பவம் நடந்த நேரத்தில், பாட்னா செல்லும் மகத் எக்ஸ்பிரஸ் நடைமேடை 14-இல் நின்று கொண்டிருந்ததாகவும், புது தில்லி-ஜம்மு உத்தா் சம்பா்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் நடைமேடை 15-இல் நின்று கொண்டிருந்தது.
மேலும், படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடைமேடை பாலத்திலிருந்து 14ஆவது மற்றும் 15ஆவது நடைமேடை நோக்கி வந்து கொண்டிருந்த சிலா் வழுக்கி மற்றவா்கள் மீது விழுந்தனா். இது கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்துவிட்டது’ என்று வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி (சிபிஆா்ஓ) ஹிமான்ஷு உபாத்யாய் தெரிவித்தாா்.