வயநாடு: துப்பாக்கிச்சூட்டில் தப்பிய புலி, சடலமாக கண்டெடுப்பு - குழப்பத்தில் வனத்துறை
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகில் உள்ள பஞ்சாரக்கொல்லி பகுதி காப்பி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராதா என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு புலி ஒன்று தாக்கி கொன்றது. அவரின் உடல் பாகங்களையும் அந்த புலி தின்றுள்ளது. மனித உடலை தின்ற அந்த புலியை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க அரசு உத்தரவிட்டது. உயிருடன் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் சுட்டுக் கொல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்த நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.
அப்போது திடீரென பாய்ந்த புலி, வனத்துறை பணியாளர் ஒருவரை தாக்கியிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார். அந்த தாக்குதல் சம்பவத்தின் புலி மீது வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால், அங்கிருந்து புலி தப்பிச் சென்றிருக்கிறது. புலியை பிடிக்க மீண்டும் இன்று காலை வனத்துறையினர் சென்றபோது அதே புலி சடலமாக இறந்து கிடந்ததைக் கண்டு குழப்பமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறாய்வு மேற்கொண்ட பிறகே உண்மை காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY