செய்திகள் :

விருதுநகர்: வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து; 19 பயணிகள் படுகாயம்!

post image

விருதுநகரில் இருந்து கிளம்பிய டவுன் பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்ததில் 19 பயணிகள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது பேசியவர்கள், "விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கவுண்டம்பட்டிக்கு (நேற்று) டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. பேருந்தை கே.உசிலம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 30) ஓட்டினார். மதுரை மாவட்டம், எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் (35) என்பவர் நடத்துனராக இருந்தார். பஸ்ஸில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். முக்கிய கிராமங்கள் வழியே செல்லும் பஸ் என்பதால், பஸ்ஸில் கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளி மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், பஸ் விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தை கடந்து சந்திரகிரிபுரம் ஊருக்கு வந்து கொண்டிருந்தது.

மீட்பு பணி
விபத்து

அப்போது கண்மாயை ஒட்டி வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ், கண்மாய் ஓடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச் செல்வி(35), கிருஷ்ணவேணி (16), ரஞ்சித்(16), முத்தரசி(14), மீனாட்சி (49), ராம்தர்ஷன்(14), மாதவன் (13), தீபக்குமார்(16), ஹரி பாலாஜி(12), சத்யா(24), மீனா(39) லோகேஷ், பத்மஸ்ரீ(13) ஆகியோர் உள்பட 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலருக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பஸ்ஸுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

Wayanad: ``கண்முன்னே புலி கடித்துக் குதறியது; காப்பாற்ற முடியவில்லை'' -கண்ணீர் விடும் தொழிலாளர்கள்

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்களின் நடமாட்டமும் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றின் வாழிடச் சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக தோட்டங்களிலும் குடியிருப்பு பகுத... மேலும் பார்க்க

ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து 8 பேர் பலி; மகாராஷ்டிரா சோகம்...

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் உள்ள ஜவஹர் நகரில் ஆயுத தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இத்தொழிற்சாலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்... மேலும் பார்க்க

``மரணம் வீணாக கூடாது; பாராகிளைடிங் விதிகளை கடுமையாக்க வேண்டும்" - Zoho ஸ்ரீதர் வேம்பு உருக்கம்

சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு, 'பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``... மேலும் பார்க்க

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம்

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை ... மேலும் பார்க்க

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி' பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் "ராகுல் டிக்கி", சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பலூன் திருவிழா: கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன்... கேரளாவில் மீட்பு!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்ச... மேலும் பார்க்க