செய்திகள் :

Aman Jaiswal: பைக் மீது லாரி மோதி சின்னத்திரை நடிகர் மரணம்; படப்பிடிப்புக்கு சென்றபோது சோகம்

post image

TV Actor Aman Jaiswal: டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் அமன் ஜெய்ஸ்வால் (23). இவர் தார்திபுத்ரா நந்தினி என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அமன் மும்பையில் நேற்று மாலை படப்பிடிப்பு ஒத்திகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அவரது வாகனம் மேற்கு புறநகரில் உள்ள ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்புறமிருந்து வந்த லாரி அமன் ஜெய்ஸ்வால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதிக்கொண்டது. உடனே அவர் காமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TV Actor Aman Jaiswal

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமன் ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் உதாரியான் என்ற டிவி நிகழ்ச்சியில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு டிவி நிகழ்ச்சியில் நடித்து வந்த அமன் ஜெய்ஸ்வால் 23 வயதில் விபத்தில் மரணம் அடைந்தது, சின்னத்திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து இயக்குனர் தீரஜ் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தியில், "அமன் ஜெய்ஸ்வால் படப்பிடிப்பு ஒத்திகைக்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விட்டது. அமன் எப்போதும் எங்களது நினைவில் இருப்பார். கடவுள் சில சமயங்களில் எவ்வளவு கொடூரமானவராக இருப்பார் என்பதை இன்று உங்கள் மரணம் எனக்கு உணர்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி' பைக் விபத்தில் சிக்கி மரணம்!

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் "ராகுல் டிக்கி", சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பலூன் திருவிழா: கட்டுப்பாட்டை இழந்த ராட்சத பலூன்... கேரளாவில் மீட்பு!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் 10-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்ச... மேலும் பார்க்க

பஞ்சாப்: விபத்தா? தற்கொலையா? - துப்பாக்கியைத் துடைக்கும்போது உயிரிழந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குர்பிரீத் கோகி. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குர்பிரீத் நேற்று 11 மணியளவில் தனது வீட்டில் தனது துப்பாக்கியை எடுத்து துடைத்துக்கொண்டிருந்தார். அந்நே... மேலும் பார்க்க

Tirupati stampede: `இந்தத் துயரச் சம்பவம்...' - திருப்பதி நெரிசல் குறித்து ஆந்திர முதல்வரின் பதிவு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 10 நாள்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் ... மேலும் பார்க்க

Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சுத் திணறி 6 பேர் பலி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை... அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த ... மேலும் பார்க்க

கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்

மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந... மேலும் பார்க்க