செய்திகள் :

Tirupati stampede: `இந்தத் துயரச் சம்பவம்...' - திருப்பதி நெரிசல் குறித்து ஆந்திர முதல்வரின் பதிவு

post image
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10-ம் தேதி முதல் 19-ம் தேதிவரை சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 10 நாள்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் மூன்று நாள்களுக்கான 1,20,000 இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

அதற்காக 94 கவுன்ட்டர்களையும் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை முதலே டிக்கெட் கவுன்ட்டர்களில் கூட்டம் கூடத் தொடங்கியது.

திருப்பதி நெரிசல்

இந்தக் கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பக்தர் மல்லிகா உட்பட 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் எக்ஸ் பக்கத்தில், ``திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவாராவைத் தரிசிக்க இலவச டோக்கன்களுக்காக, திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் இறந்தது, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டோக்கன்களுக்காக பக்தர்கள் அதிகளவில் கூடியிருந்த நேரத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், என்னை மிகவும் பாதித்திருக்கிறது.

அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நான் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி, நிலைமையை கவனித்து வருகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருப்பதி நெரிசல்

திருப்பதி நெரிசலின்போது என்ன நடந்தது என்பது குறித்து, வெளியான செய்தியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஜனவரி 9 அன்று வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான தரிசன டோக்கன்களை விநியோகிக்க சிறப்பு கவுண்டர்களை அமைத்திருந்தது. இந்த டோக்கன்கள், விஷ்ணு நிவாசம் கோயிலுக்கு அருகிலுள்ள பைரகிபட்டேடாவில் உள்ள MGM உயர்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்டன. புதன்கிழமை காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்ட்டர்களில் வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

ஆனால், மாலையில், கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கட்டுக்கடங்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு பெண் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைய, அவரை மீட்பதற்காக ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டபோது, கூட்டம் ஒரே நேரத்தில் முன்னோக்கிச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குழப்பமான சூழலுக்காக தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சுத் திணறி 6 பேர் பலி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜன.10-ம் தேதி `சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை... அதாவது, தொடர்ந்து 10 நாள்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த ... மேலும் பார்க்க

கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்

மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந... மேலும் பார்க்க

நல்லபாம்பு கடித்து மரணமடைந்த பாம்புபிடி வீரர்; ``குடும்பத்துக்கு அரசு உதவி..'' -மக்கள் கோரிக்கை!

கேரள மாநிலத்தில் பாம்புபிடி வீரர்கள் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் மக்கள் உடனடியாக பாம்புபிடி வீரர்களை தொடர்புகொண்டு உதவி கேட்கின்றனர். பாம்புபிடி வீரர்கள் பாம்பை பிடித... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 தொழிலாளர்கள் பலி

வச்சக்காரப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.மீட்புப் பணி அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூரை அடுத்த பொம்மையாபுர... மேலும் பார்க்க

Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; என்ன‌ நடந்தது?

நீலகிரி மாவட்டத்தில் தற்போது உறைபனி காலம் என்பதால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் தாங்க முடியாத அளவிற்குக் குளிர் நடுங்க வைக்கிறது. வெம்மை... மேலும் பார்க்க

Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த சோகம்!

வனங்கள் நிறைந்திருந்த நீலகிரியில் தனியார் மற்றும் அரசு மூலம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சி பணிகளின் காரணமாக வனங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. வாழிடங்களையும் வழித்தடங்களைய... மேலும் பார்க்க