கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
கீழே விழுந்த பயணியை மீட்கப் பின்னோக்கி ஓடிய ரயில்; சக பயணிகளின் போராட்டத்தையும் மீறி நடந்த சோகம்
மும்பையில் ஒவ்வொரு நாளும் புறநகர் ரயிலிலிருந்து கீழே விழுந்து 5க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து புனே நோக்கி தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 11 மணிக்கு மன்மாட் என்ற ரயில் நிலையத்தை நெருங்கியபோது பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
ரயிலின் மூன்றாவது பெட்டியிலிருந்து அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு இருப்பதை ரயில்வே கார்டு கதம் தெரிந்து கொண்டார். அங்கு விசாரித்தபோது அந்த பெட்டியிலிருந்து பயணி ஒருவர் கீழே விழுந்திருந்தார். இது குறித்து ரயில்வே கார்டு கதம் ரயில் மோட்டார்மென் ஆலமிற்குத் தகவல் கொடுத்தார். கீழே விழுந்த பயணியை மீட்க ரயிலைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் ஒப்புதல் தேவையாக இருந்தது.
மோட்டார்மென் ஆலம் மன்மாட் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ரயிலைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல ஒப்புதல் கேட்டார். பயணி கீழே விழுந்த ரயிலுக்குப் பின்னால் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. உடனே கட்டுப்பாட்டு அறையிலிருந்து அந்த ரயிலைத் தொடர்பு கொண்டு அருகிலுள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தபோவன் எக்ஸ்பிரஸ் ரயில் பின்னோக்கி சென்றது. சுமார் 700 மீட்டர் தூரம் பின்னோக்கிச் சென்ற பிறகுக் கீழே விழுந்து கிடந்த பயணி கண்டுபிடிக்கப்பட்டார். அந்த பயணியைச் சக பயணிகள் ரயிலில் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து ரயில் மன்மாட் சென்றது. அங்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையிலிருந்தது. அங்கிருந்து உடனே காயம் அடைந்த பயணி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்பயணியின் பெயர் சர்வார் ஷேக் (30) என்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விகடன் ஆடியோ புத்தகங்கள்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...