செய்திகள் :

`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

post image
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை பதிவிட்டனர். இதையடுத்து ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக கமென்ட் செய்த 27 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்தியது பிரபல தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் என நடிகை ஹனி ரோஸ் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தொழிலதிபர் போபிசெம்மண்ணூர்

பொது மேடையில் வைத்து பெண்மையை கழங்கப்படுத்தும் விதமாகவும், தொடர்ச்சியாக ஆபாசமாக விமர்ச்சித்ததாகவும் போபி செம்மண்ணூர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் போலீஸில் ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். அதில்,  2024 ஆகஸ்ட் 7-ம் தேதி கோழிக்கோட்டில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் போபி செம்மண்ணூர் தனக்கு நெக்லஸ் அணிவித்ததுடன், கையை பிடித்து சுற்றினார் எனவும் புகாரில் கூறியிருந்தார்.

அவர் தன்னையும், வேறு பெண்களையும் ஆபாசமாக கமெண்ட் அடிக்கும் வீடியோவையும் ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.

நடிகை ஹனி ரோஸ்

ஹனி ரோஸ் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் போபி செம்மண்ணூருக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்மையை கழங்கப்படுத்துதல், ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீடியாக்களிடம் பேசிய ஹனி ரோஸ், "எச்சரிக்கை செய்தும் தொடர்ச்சியாக அவர் அப்படி செயல்பட்டதால்தான் புகாரளித்தேன். இவ்வளவு நாட்களாக என் பெயரைச் சொல்லித்தான் மோசமான கமென்ட்களைக் கூறினர். எனவே நான் ஒரு புகார் அளித்துள்ளதால், என் பெயருடன் அதுகுறித்த செய்திகள் வெளியாக வேண்டும்" என்றார்.

தொழில் அதிபர் போபிசெம்மண்ணூர்

இதுகுறித்து தொழிலதிபர் போபி செம்மண்ணூர் கூறுகையில், "நான் தவறான எண்ணத்துடன் அவரை அணுகவில்லை. திறப்புவிழாவுக்கு வரும்போது நகைகள் அணிவிப்பதும், கையில் வளையல் போடுவதும் பலமுறை செய்துள்ளேன். நான் மோசமான எண்ணத்துடன் அதைச் செய்யவில்லை. அவர் எதற்காக திடீரென புகார் கொடுத்தார் எனத் தெரியவில்லை. நான் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. என்னிடம் நேரடியாக அவர் இதுபற்றி சொல்லவில்லை. இதுபோன்ற விஷயங்களை செய்யக்கூடாது என மேலாளரிடம் கூறியிருக்கிறார். மோசமாக நான் எதுவும் கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

``பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும், இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்'' -அருந்ததி ராய்

வயநாடு இலக்கியத் திருவிழா 2024வயநாடு இலக்கியத் திருவிழா 2024 கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் பிரபல ஆங்கில எழுத்தாளர் ... மேலும் பார்க்க

Marco Review: ரத்தம் தெறிக்க தெறிக்க உன்னி முகுந்தனின் ஒரு ஆக்ஷன் சினிமா! - ஆனால் கதை எங்கே பாஸ்?

மலையாள இயக்குநர் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியான `மைக்கேல்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உன்னி முகுந்தனின் மார்கோ கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு `ஸ்டாண்ட் அலோன்' திரைப்படமாக `மார்கோ' ப... மேலும் பார்க்க

Identity Review: வேகம் குறையாத திரைக்கதைதான்... ஆனால் ஒற்றை படத்தில் ஓராயிரம் லாஜிக் ஓட்டைகளா?

துணிக் கடையின் ட்ரெயல் ரூமில் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுபவரை, அவரின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று கொல்கிறார் ஒரு மர்ம நபர். அந்தக் கொலையாளியை நேரில் கண்ட ஒரே சாட்சி அலிஷா (த்ரிஷா). இந்த வழக்கை வ... மேலும் பார்க்க

`மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர்! `ஆவேஷம்' இயக்குநர்! `தளபதி 69' தயாரிப்பாளர் - ஒன்றிணையும் கூட்டணி!

`மஞ்சும்மல் பாய்ஸ்' இயக்குநர் சிதம்பரம் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.கடந்தாண்டு `மஞ்சும்மல்' பாய்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு,மலையாளம் என அனைத்துப் பக்கங்களில் அதிரடியான ஹ... மேலும் பார்க்க

2024 Rewind: 'ஆவேசம் டு Rifle Club' கவனம் ஈர்த்த மல்லுவுட்... எந்த படங்கள், எதில் பார்க்கலாம்?!

மலையாள திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதுமே மவுசு அதிகம். இந்த 2024 ஆண்டில் வெளியான ஏராளமான மலையாள திரைப்படங்கள் கோலிவுட் மட்டுமல்ல இந்திய சினிமாவையேத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. இம்முற... மேலும் பார்க்க