யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதா? பும்ரா கேப்டனாக எதிர்ப்பு!
ஜஸ்பிரீத் பும்ராவை இந்திய டெஸ்ட் அணியின் முழு நேர கேப்டனாக தேர்வு செய்யக்கூடாதென முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. பும்ரா 32 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றார்.
சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் பும்ரா முதுகு வலியால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அதனால் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியவில்லை. ரோஹித் தலைமையில் அனைத்து போட்டிகளும் தோல்வியுற்ற இந்திய அணி அடுத்த கேப்டனாக பும்ராவை நியமிக்கவிருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கூறியதாவது:
பும்ராவை கேப்டனாக்குவதற்கு முன்பு பிசிசிஐ ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வேண்டும். விக்கெட் எடுப்பதிலும் ஃபிட்டாக இருப்பதில் மட்டுமே பும்ரா கவனம் செலுத்த வேண்டும்.
கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்து அவரை காயம் ஏற்படுத்தி விடாதீர்கள். பொன் முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள்.
ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்களாக இருந்துள்ளார்கள். அதனால், அவர்களில் யாருவது ஒருவரை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.
ரோஹித்துக்கு அடுத்து பும்ராவை கேப்டனாக நியமிப்பது சரியாக இருக்காது. ஏனெனில் அவர் ஒருவர்தான் தனது உயிரைக்கொடுத்து அணிக்காக பந்துவீசுகிறார். மற்ற பந்துவீச்சாளர்கள் குறைவான உதவியே செய்கிறார்கள். அதனால்தான் பும்ராவுக்கு அதிகமாக காயம் ஏற்படுகிறது.
ஒரு பேட்டரை கேப்டனாக நியமித்தால் அணியில் ஒரு சமநிலை நிலவும். பும்ரா பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்தினால் சரியாக இருக்கும் எனக் கூறினார்.