பயிற்சியாளர் பொறுப்புக்கு கௌதம் கம்பீர் சரியான தேர்வல்ல: முன்னாள் இந்திய வீரர்
Los Angeles: 10,600 ஏக்கரைக் கடந்து பரவும் காட்டுத் 'தீ' ; 5 பேர் பலி; அப்புறப்படுத்தப்படும் மக்கள்!
அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகல் காட்டுத்தீக்கு இரையாகியிருக்கிறது. இரண்டு வாரத்துக்கும் மேலாக எரிந்துக்கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 5 பேர் பலியாகியிருக்கின்றனர். தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லாததால், ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 2500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
99 மைல் வேகத்தில் காற்று வீசுவதால், இந்தக் காட்டுத்தீக்கு இதுவரை 10,600 ஏக்கர் பலியாகியிருக்கிறது. 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் காணாமல் போயிருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வன ஊழியர் பதிவிட்டிருக்கிறார். 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், 60,000 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோ பைடன் அரசு தீயைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs