எதிர்பார்த்தைவிட அதிகளவில் நன்கொடை! டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு போட்டிபோடும் த...
Rain Alert: நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ன ஆகும்... எந்த மாவட்டங்களில் மழை?!
நேற்று முதல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை 10 மணி வரை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.
நேற்றைய சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பு படி, நேற்று வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருந்த முன்தினம் தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று கரையை கடந்திருக்கும் மற்றும் இன்று அது வலுவிழக்கும்.
இதனால் தான், வட கடலோர மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை வரை பெய்யலாம்.