செய்திகள் :

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது: காவல் ஆணையர் அருண்

post image

எங்களுக்கு எந்தக் கட்சி பாகுபாடும் கிடையாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அண்ணா பல்கலைக்கழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 140 காவலர்கள் உள்ளனர். அண்ணா பல்கலை. முழுவதும் 11 நுழைவாயில்கள் உள்ளது. வேறு ஏதேனும் வழியில் உள்ளே நுழைந்தாரா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

எஃப்ஐஆர் வெளியானது சட்டப்படி குற்றம். இணையத்தில் எஃப்ஐஆர்-ஐ பார்த்தவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம். அவர்கள் மூலம் வெளியே கசிந்து இருக்கலாம். வெளியிட்டரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிக்க: இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி

குற்றம் நடக்கும்போது ஞானசேகரின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்துள்ளது. யாரிடமும் அவர் சார் என்று பேசவில்லை.

கைதான ஞானசேகரின் மீது 20 வழக்குகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை செய்ததாக எவ்வித வழக்குகளும் இதுவரை பதியப்படவில்லை. புகார் அளித்த ஒரே நாளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளி எந்தக் கட்சியை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு கவலையில்லை.

பாதிக்கப்பட்ட மாணவி பாதுகாப்பாக உள்ளார். காவல் துறையின் நடவடிக்கையால் மாணவிக்கு மனநிறைவுதான். இந்த பெண்ணைப்போல மற்ற அனைவரும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

மன்மோகன் சிங் மறைவு: கர்நாடகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிப்பு

பெங்களூரு: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கர்நாடகத்தில் வங்கிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு கர்நாடக அரசு வெள்ளிக்கிழமை(டிச.27) பொது விடுமுறை அறிவித்துள்... மேலும் பார்க்க

விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத விளக்கு பூஜை

விராலிமலை: விராலிமலை அம்மன் கோவிலில் மார்கழி மாதம் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் நான்காவது பூஜை வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பெ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,331 கன அடியிலிருந்து 2886 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. இதையும் படிக்க |முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்அணையில் இருந்து கா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.விஜய் பிரசாத், சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் அய்யப்பன் சுப்பிரமணி இயக்கத்தில் வெளியான ரூபன் திரைப... மேலும் பார்க்க

காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை! கொலையாளி தற்கொலை முயற்சி!

அஸ்ஸாம் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை குத்திக்கொலை செய்துவிட்டு, கொலையாளி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நஹ்ரொனி பாத் பகுதியில் மெளசுமி கோகொய் (வயது-27) என்ற பெண், இன்று (டிச.26) காலை 11 மணி... மேலும் பார்க்க

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘ஞானபீடம்’ விருது பெற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாய... மேலும் பார்க்க