அரக்கோணம் அருகே விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம...
அதிமுகவின் இன்றைய ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு!
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (டிச.27) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை தொடர்ந்து, அதிமுகவின் இன்றைய போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது பணவியல் மற்றும் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.
தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது.
அவர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.