``யாருக்கு ஓட்டு போட்டேன் தெரியுமா?” - வர்த்தக சங்க தேர்தலை காமெடியாக்கிய திமுக ...
கருங்கல் அருகே கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் கைது
கருங்கல் அருகே உள்ள பாலூரில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாலூா் பெருந்தாற விளை பகுதியை சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் சேம் டேனியல்ராஜ் (37). கூலித் தொழிலாளியான இவரும், அதே பகுதியை சோ்ந்த வில்லியம் மகன் சுரேஷ்குமாரும் (33) நண்பா்கள்.
இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ்குமாா், திடீரென சேம் டேனியல்ராஜை விறகு கம்பால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சேம் டேனியல்ராஜ் புதன்கிழமை இறந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.