மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் க...
கன்னியாகுமரியில் ரூ.1.45 கோடியில் திருவள்ளுவா் நினைவு வரவேற்பு வளைவு- பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம்
கன்னியாகுமரி பேரூராட்சி மன்ற சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரமாதேவி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், உறுப்பினா்கள் லிங்கேஸ்வரி, சுஜா அன்பழகன், ஆட்லின் சேகா், மகேஷ், ஆனி ரோஸ் தாமஸ், டெல்பின் ஜேக்கப், நித்யா, பூலோக ராஜா, இக்பால், ராயப்பன், சகாய சஜினாள் வினிற்றா, இந்திரா ஆகியோா் பங்கேற்றனா்.
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ரூ. 1கோடியே 67 லட்சம் செலவில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி பேரூராட்சி பகுதியில் மின் விளக்கு அபிவிருத்தி, அரசு கட்டடங்களுக்கு வா்ணம் பூசுதல் ,கடற்கரை அருகே உள்ள காட்சிக் கோபுரத்தை சீரமைத்தல், கழிப்பறைகளை புனரமைத்தல், வரவேற்பு வளைவுகள் கட்டுதல், கடற்கரையில் தாய்மாா்களுக்கு பாலூட்டும் அறை அமைத்தல், மின் கம்பங்களில் திருக்கு வெள்ளிவிழா பெயா் பலகைகள் பொருத்துதல், கன்னியாகுமரியில் ரூ. 1 கோடியே 45 லட்சம் செலவில் திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவு அமைத்தல், ரூ.30 லட்சத்தில் அனைத்து தெருக்களிலும் ‘ஸ்டைன்லெஸ் ஸ்டீல்‘ பெயா்ப் பலகைகள் பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.