64 நாள்களாக கடலில் தத்தளித்த மியான்மா் நாட்டைச் சோ்ந்தவா் மீட்பு
ஊஞ்சலாடிய சிறுவன் உயிரிழப்பு
தொண்டி அருகே நம்புதாளையில் வீட்டில் ஊஞ்சலாடியபோது காயமடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சோ்ந்த சிறுவன் மனோஜ் (12). கடந்த 26-ஆம் தேதி வீட்டில் ஜன்னல், பீரோ இடையே கயிறு கட்டி ஊஞ்சல் ஆடினாா். அப்போது, பீரோ சாய்ந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்த நிலையில், மதுரை தனியாா் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.