ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!
தமிழ்நாட்டில் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐஏஎஸ் முதல்வரின் முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புச் செயலாளர்கள், ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை நல ஆணையரான ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராக பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டைச் (பேட்ஜ்) சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!