செய்திகள் :

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

post image

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படையில் தனது 39 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை(டிச. 31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, லடாக் மற்றும் அதையொட்டியுள்ள வட இந்தியாவின் சில பகுதிகளில் வான் வழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தளபதியாக ஜிதேந்திரா மிஸ்ரா புத்தாண்டு நாளான இன்று(ஜன. 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமானப் படையில் 38 ஆண்டு கால அனுபவமிக்கவரான ஜிதேந்திரா மிஸ்ரா விமானப் படை விமானியாகவும், அதன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஒத்திகைகளில் தலைமையேற்று நடத்தியுள்ளதுடன், விமானம் மற்றும் அதன் சோதனை அமைப்பில்(ஏஎஸ்டிஇ) தலைமை விமானியாகவும், விமானப்படை தலைமையகத்தில் உதவி தளபதியாகவும் (திட்டப் பணிகள்) உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். விமானப்படையில் இவரது சேவையைப் பாராட்டி உயர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சி மையம் மற்றும் விமானப் படை விமானிகள் பயிற்சி பள்ளி, அமெரிக்காவிலுள்ள விமான கட்டுப்பாட்டு மற்றும் விமானப் படை பணியாளர் கல்லூரி, பிரிட்டனிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி கேட்ட பத்திரிகையாளர் சடலமாக மீட்பு!

சத்தீஸ்கரில் சாலை கட்டுமானத்தில் முறைகேடுகள் நடப்பதாக கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கரில் ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தா... மேலும் பார்க்க

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவையும் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு ... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதி விபத்து; குழந்தை உள்பட 5 பேர் பலி!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ராஜஸ்தானில் உதய்ப்பூரில் கோகுண்டா - பிந்த்வாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழ... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு: நகா் முழுவதும் போராட்டம் - பதற்றம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து பீதம்பூருக்கு எடுத்துவரப்பட்ட நச்சுக் கழிவுகள், அங்கு பாதுகாப்பான முறையில் எரிக்கப்படவுள்ளன. அதேநேரம், தங்களது பகுதியில் க... மேலும் பார்க்க

ஒடிஸா, மணிப்பூா் ஆளுநா்கள் பதவியேற்பு

ஒடிஸா மற்றும் மணிப்பூரின் புதிய ஆளுநா்களாக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் அஜய் குமாா் பல்லா முறையே வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்ல... மேலும் பார்க்க

தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளி... மேலும் பார்க்க