செய்திகள் :

சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சகோதரன் கைது!

post image

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றிக் கொல்ல முயன்ற சகோதரன் கைது செய்யப்பட்டார்.

தானே மாவட்டத்திலுள்ள நவி மும்பை நகரத்தின் ஏபிஎம்சி பகுதியில் தன்னுடைய 17 வயது சகோதரி வேறொரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த நபர், அந்த சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.

மேலும், அந்த சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து சிகிரெட் லைட்டரால் கொளுத்தி விடுவேன் என அந்த நபர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பள்ளிக்கூட வாசலில் மாணவன் கத்தியால் குத்திக் கொலை!

பின்னர், தனது சகோதரனிடம் இருந்து தப்பித்த அந்த சிறுமி நவி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த நபர் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவு 109 கீழ் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மூன்றாவதும் பெண் குழந்தையைப் பெற்றதாக தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இனி ஒரே அட்டையில் மெட்ரோ, மாநகரப் பேருந்தில் பயணிக்கலாம்!

சிங்கார சென்னை பயண அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) ... மேலும் பார்க்க

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!

மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிகாரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறு... மேலும் பார்க்க

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சென்றுள்ளது சிறுபிள்ளைத்தனமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ... மேலும் பார்க்க

இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் (வயது 35) என்பவர் கடந்த ... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை பயண அட்டை: அமைச்சர் தொடக்கி வைத்தார்!

மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூலம் சிங்கார சென்னை பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று(ஜன. 6) தொடக்கி வ... மேலும் பார்க்க

துப்பாக்கி சூட்டில் இளைஞர் படுகாயம்! 2 பேர் கைது!

தெற்கு தில்லியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவரை சுட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த நசீர் கான் (வயது 22) என்பவரது ... மேலும் பார்க்க