செய்திகள் :

Aus vs Ind: "இதே பயிற்சியாளர்கள் தொடர வேண்டுமா?" - கம்பீர் குழு நோக்கி கவாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

post image

கடந்த ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, ஜூன் மாதம் ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆனால், கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பற்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்தது. அதைத்தொடர்ந்து, சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் 0 - 3 என டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இப்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை 1 - 3 இழந்திருக்கிறது.

கம்பீர் - ரோஹித்
கம்பீர் - ரோஹித்

கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்ததில் அணியின் பேட்டிங் யூனிட் பர்ஃபாமன்ஸ் மோசமாக இருந்தது முக்கிய காரணம். குறிப்பாக, கேப்டன் ரோஹித் மற்றும் சீனியர் வீரர் கோலி ஆகியோரின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதேசமயம், தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு அணியை எந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறீர்கள் என்ற கேள்விகள் கம்பீர் மீது எழாமலும் இல்லை. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்நாள் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அணியின் பயிற்சியாளர்கள் மீதான தனது கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்தில் பேசிய கவாஸ்கர், ``பயிற்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளரைப் பற்றிப் பேசியாக வேண்டும். நியூசிலாந்துக்கெதிரான போட்டிகளைப் பாருங்கள்... அனைவரும் குறைந்த ரன்களில் அவுட். அனைத்து போட்டிகளிலும் தோற்றோம். ஆஸ்திரேலியாவில் கூட பேட்டிங் பலமாக இல்லை. எனவே கேள்விகள் கேட்கப்பட வேண்டும். நீங்கள் (பயிற்சியாளர்கள்) என்ன செய்தீர்கள்? ஏன் எந்த முன்னேற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை?

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

நம்முடைய பேட்மேன்ஸ்கள் நன்றாக விளையாட முடியாத அளவுக்குப் பந்துவீசப்பட்டதா என்பதை நீங்கள் கட்டலாம். சிறப்பான பந்துவீச்சு இருந்தால், சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறுவார்கள். ஆனால், இங்கு அப்படியில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைக் காட்ட வேண்டும். சில வீரர்கள் எதிர்காலத்தில் ஆடவேண்டுமா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. அதேபோல, இந்தப் பயிற்சியாளர்கள் குழுவும் தொடர வேண்டுமா என்பதையும் கேட்க வேண்டும்.

கம்பீர்
கம்பீர்

நான் சாம்பியன்ஸ் டிராபியைப் பற்றிப் பேசவில்லை. இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைப் பற்றிப் பேசுகிறேன். அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. எனவே நான் கேட்கிறேன், நீங்கள் என்ன செய்தீர்கள்? வீரர்களை நீங்கள் எப்படி மேம்படுத்தப் போகிறீர்கள்? வீரர்களின் அணுகுமுறையில் நீங்கள் பணியாற்ற வேண்டும்." என்று கூறினார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Team India: ``சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும்" - ஹர்பஜன் சிங் ஆதங்கம்

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது.குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப்... மேலும் பார்க்க

`சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்' - ECB-க்கு வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) இழுபறிக்குப் பின்னர், ஐ.சி.சி-யின் முடிவை ஏற்று அடுத்த மாதம் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பிப்ரவரி 19 தொ... மேலும் பார்க்க

Karun Nair 2.0: `5 மேட்ச், 4 சதம், 542 ரன்கள்.. உலக சாதனை' - இந்திய அணியின் கதவை தட்டும் கருண் நாயர்

2016 டிசம்பரில் இந்தியா - இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், சென்னையில் நடைபெற்ற 5-வது போட்டியில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக முச்சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கருண் நாயர். அந்த டெஸ... மேலும் பார்க்க

Virat Kohli: `பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கோலியின் கடைசி தொடரா..' - ஆஸி கேப்டன் கம்மின்ஸ் கூறியதென்ன?

சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் 2024-25 முடிவுக்கு வந்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் வென்றதன் மூலம் 3 - 1 என தொடரைக் கைப்பற்றிய ... மேலும் பார்க்க

Gambhir: ``எல்லோரும் உள்ளூர் கிரிக்கெட் ஆடவேண்டும்; இலையென்றால்..." - BGT தோல்விக்குப் பின் கம்பீர்

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது 9 ஆண்டுகளாகத் தன்வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவில் இழந்திருக்கிறது.முதல்முறையாக ஐந்து டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க

Virat Kohli : ``இந்திய அணிக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை"- கோலியை கடுமையாகச் சாடும் இர்பான் பதான்

பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியை வென்ற போதும் இந்திய அணி தொடரை இழந்ததற்கு சீனியர் வீரர்களே மிக முக்கிய காரணம். இந்நிலையில், 'இந்திய அணிக்கு சூப்பர... மேலும் பார்க்க