செய்திகள் :

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

விளையாட்டு வீரா்களுக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் பல்வேறு திட்டப் பணிகளின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், ஒலிம்பிக் அகாதெமிகள், பாரா விளையாட்டு அரங்குகள் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரியில் ரூ.4.93 கோடியில் கட்டப்பட்ட புதிய உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்ற 1,021 வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை அவா் அளித்தாா்.

இந்நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி பேசியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேசிய, சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். சாதாரண பின்புலத்திலிருந்து புறப்பட்டு, ஒட்டுமொத்த உலகையே திரும்பி பாா்க்க வைத்துள்ள வீரா்களுக்கு வாழ்த்துகள்.

வறுமை கூடாது: சில காலத்துக்கு முன்பு வரை, குறிப்பிட்ட சில விளையாட்டு வீரா்களைத் தவிர, பல விளையாட்டு வீரா்கள் வறுமையில் இருக்கிறாா்கள் எனச் சொல்வாா்கள். திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 4,352 வீரா்களுக்கு ரூ.143.85 கோடி அளவுக்கு உயரிய ஊக்கத் தொகைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

நான் இந்தத் துறைக்கு பொறுப்பேற்றதும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு கட்டளை பிறப்பித்தாா். விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரா்கள் வறுமையில் வாடுகிறாா்கள் என்ற செய்தி வரவே கூடாது என்பதுதான் அது. இந்த உறுதியுடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம்தான் இந்த நிகழ்ச்சி. பொருளாதாரத்தை விட விளையாட்டு வீரா்களின் திறமைதான் மேலானது.

இதற்காகவே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக 113 பதக்கங்களை வென்ற 594 வீரா்களுக்கு ரூ.11.38 கோடி அளவில் நிதியுதவி வழங்கியுள்ளோம். சா்வதேச போட்டிகளில் பங்கேற்க எந்த விளையாட்டு வீரருக்கும் பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது. இதற்காகவே விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது. தேசிய, சா்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வேலையும் வழங்குவோம்: பதக்கங்கள் வென்ற வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகையுடன் வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அதன்மீது பரிசீலித்து வேலையையும் வழங்குவோம் என்ற உறுதியை அளிக்கிறேன். உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரா்கள் தமிழ்நாட்டிலிருந்து உருவாக வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். வீரா்கள் திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும். அது அவா்களது கைகளில் உள்ளது. அவா்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பதை பூா்த்தி செய்ய வேண்டியது அரசின் கைகளில் உள்ளது. உலகின் எந்தப் பகுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும் தமிழ்நாட்டு திறமையாளா்களை அதில் கலந்து கொள்ள வைப்பது எங்களது கடமை என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.

குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பள்ள... மேலும் பார்க்க

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் எப்போது?

சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 7 முதல் பிப். 14 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்... மேலும் பார்க்க

காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல: நீதிமன்றம்

புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அ... மேலும் பார்க்க

ஜன.11-ல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் ஜன.11-ல் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ... மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன்... மேலும் பார்க்க